2011 ஆம் ஆண்டு மனிதக் கொல்லி ஆயுதங்களை விற்பனை செய்வதில் அமரிக்கா சாதனை படைத்துள்ளது. அமரிக்காவின் ஆயுத விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் அமரிக்கா 66.3 பில்லியன் டொலர்களுக்கு அழிவு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்தத் தொகை உலகின் மொத்த ஆயுத விற்பனையில் 78 வீதமாகும். உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினிச் சாவையும் போசாக்கின்மையையும் எதிர் நோக்கும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.