இலங்கையில் தமிழ் மக்கள் மோதலில் பலியாவதை கண்டிக்கும் வகையில் இன்று சனிக்கிழமையன்று லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் அதில் கலந்துக் கொண்டனர்.
லண்டன் நகரின் முக்கிய வீதிகளில் நடந்த இந்த பேரணியில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆட்கள் நிறைந்துவிட்டதால், அந்தப் பாதையில் வாகனப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது.
பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடியிருந்தனர்.
கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிகவும் கவலையுடன் காணப்பட்டார்கள்.
இலங்கையில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகின்ற பாதாதைகள், வீதி நாடகங்கள் ஆகியவற்றுடன், இலங்கை நிலைமைகளை இட்டு இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமரன் என்ற இளைஞரின் படங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிகமாக தாங்கி நின்றதை காணக்கூடியதாக இருந்தது.
தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் தாமாகவே முன்வந்து கலந்துகொண்ட இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்ட BTF சுரேந்திரன் SKY NEWS க்கு பேசும் போது புலிகள் தான் மக்களின் பிரதிநிதிகள் அவர்களுடன் யுத்தததை நிறுத்தி அரசு பேச வேண்டும் என்றார் .
ஊர்வலத்தில் கலந்துகொண்ட பலர், சிறீ லங்கா அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகு எதிராக குரல் கொடுக்கவே பங்குகொள்வதாகத் தெரிவித்தனர்.
75 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொண்ட இந்த வரலாறுகாணாத ஊர்வலம் பிரித்தானிய அரசியல் வாதிகளுக்கு இலங்கைத் தமிழர் படுகொலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைபதாக அமைந்தது என்று எட்வார்ட் டெவி எம்.பி இனியொருவிற்குத் தெரிவித்தார்.
இனி ஒரு புலியாகிறதா?
BTF சுரேந்திரன் SKY NEWS க்கு பேசும் போது புலிகள் தான் மக்களின் பிரதிநிதிகள் அவர்களுடன் யுத்தததை நிறுத்தி அரசு பேச வேண்டும்””
புலிகள் எப்போது மக்களிலிருந்து அந்நியப்பட்டார்களோ> அப்போதே தமிழ்மக்கள் புலிகளை நிராகரித்து விட்டார்கள் என்ற விடயம் சுரேந்திரனுக்கு தெரியாதோ? தமிழ்மக்கள் அழிவில் உயிர் வாழும் இக்கூட்டம் எப்படி மக்கள் பிரதிநிதிகள் ஆவர்?