சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட 65 இந்திய மீனவர்கள் 9 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை வட கடலில் வைத்து 5 படகுகளுடன் 34 மீனவர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.அத்துடன் 31 இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து 4 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.நேற்று இரவு கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவற்துறை மற்றும் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை வளங்களை நவீன படகுகள் மூலம் அபகரித்துச் செல்வது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றது என்பது உண்மை. அதே வேளை தமிழக மீனவர்களின் எல்லையை நிர்ணயிப்பதும் அதற்குரிய விதிமுறைகளை உருவாக்கிக்கிக்கொள்வதும் ஒன்றும் கடினமான செயல்பாடல்ல.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிக் கடல்வளங்களை அபகரித்து செல்வதை இந்திய அரசும் இலங்கை அரசும் விரும்புகின்றன.
சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் தமிழக மற்றும் வட கிழக்கு மீனவர்களின் பங்கு 70 களிலிருந்தே காணப்பட்டது. இந்த இரு மீனவ சமூகங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன.