Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

6000 பேர் பிரான்சில் வேலை இழப்பு , இந்தியாவில் 5000 பேருக்கு வேலை : RENAULT நிறுவனம்

பாரீஸ்:பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல, ரெனால்ட் கார் தயாரிப்பு நிறுவனம், தன் 6,000 ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டுள் ளது; அதே சமயம், இந்தியாவில் 5,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளது.பிரான்சின் பிரபல இந்த நிறுவனத் தின் கார்கள், இந்தியாவில் தயாரிக்க புனேயில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இதை அமைத்துள்ளது.
இந்தியாவில் விலை குறைந்த கார்களை தயாரிக்கவும், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. தன் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.இதன்படி, பிரான்சில் உள்ள தன் தொழிற்சாலையில் ஆறாயிரம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவில் தன் தயாரிப்பு பணிகளை விரிவுபடுத்த, கூடுதலாக அடுத்த மூன்றாண்டில் ஐந்தாயிரம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.

மும்பையில் சமீபத்தில், கார் வடிவமைப்பு மையத்தையும் ரெனோ நிறுவனம் ஆரம்பித் துள்ளது. புதிய “அல்ட்ரா’ காரை தயாரிக்க இந்த மையத்தில் வடிவமைப்பு பணிகளை செய்ய உள்ளது.பிரான்ஸ், தென் கொரியா, பிரேசிலில் வடிவமைப்பு மையங்களை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. அங்கெல்லாம் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில், ஊழியர்கள் சம்பளம் குறைவு என்பதே இதற்கு காரணம்.அதுபோல, ஐரோப் பிய நாடுகளில் உதிரி பாகங்களை வாங்கி வந்த இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து உதிரி பாகங்கள் மிகக்குறைவான விலையில் கிடைப்பதால், உதிரி பாகங்கள் வாங்குவதையும் இந்தியாவுக்கு மாற்றி வருகிறது.

Exit mobile version