போராட்டத்தில் கலந்து கொண்ட பல மாணவிகளைப் பார்த்தேன். அவர்களைப் பார்த்தால் மாணவிகளைப் போலவே இல்லை. அவர்கள் வயதுக்கு மீறி தோற்றம் காணப்படுகிறது
என்று நாட்டின் அதி உயர் பதவியாகக் கருதப்படும் குடியரசுத் தலைவர் பதவியை வகிக்கும் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி கருத்துத் தெரிவிக அது வேறு ஊடகங்களில் சர்ச்சையைக் கிளறிவிட்டுள்ளது.
இது இவ்வாறிருக சண்டிகார் பகுதியில் பழங்குடிப் பெண்களில் ஐந்தாயிரம் பெண்கள் கடந்த ஐந்து வருடங்களில் காணாமல் போயுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் ஊடகங்களுக்கு எட்டியதாகத் தெரியவில்லை. இந்திய அரசு இதுவரை கண்டுகொள்ளத இந்தப் பகுதிகளின் கனிம வளங்களையும் பழங்குடி மக்களின் நிலங்களையும் பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்காக இந்திட அரச படைகள் அபகரிக்க ஆரம்பித்தது.
கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டு எல்லைப் பகுதிகளை நோக்கித் துரத்தப்பட்ட பல குடும்பங்களிலிருந்து நகர்ப் புறங்களில் வேலை தேடிச் சென்ற பெண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். பெரும்பாலான பெண்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டோ அன்றி பாலியல் தொழிலாளர்களாகவோ மாறியிருக்கலாம் என சமூக சேவையாளர் அப்துல் கலாம் ஆசாட் தெரிவித்துள்ளார்.
. டெல்லியில் போராடும் பெண்கள் இவர்கள் குறித்தெல்லாம் கேள்வியெழுப்பத் தயாரா.