Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

50 ஆண்டு கால ஆதிக்க சக்திகளின் தடையை தகர்த்து தலித் மக்கள் ஆலய பிரவேசம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடி கிராமத்தில் 50 ஆண்டு கால ஆதிக்க சக்திகளின் தடையை தகர்த்து தலித் மக்கள் ஆலய பிரவேசம் நடத்தினர்.

இந்த கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொது ஏரியில் இம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு, அய்யனார்கோவிலில் வழிப்படும் உரிமை ஆகியவற்றை ஆதிக்க சாதியினர் மறுத்து வந்தனர். இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் 30ம் தேதி ஆலயத்திற்குள் பொங்கலிட்டு சாமி கும்மிடும் போராட்டம் நடத்தினர். அப்போது கிராம ஆதிக்க சக்தியினர் திரண்டு வந்து பொங்கலை மட்டும் வைக்க அனுமதி அளித்து, வழிப்பாடு நடத்த அனுமதி மறுத்து கோவி லையும் பூட்டி அராஜகம் செய்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சமாதான கூட்டம் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. பிப். 5அன்று பொங்கலிட்டு சாமியை வழிப்படுவது என்று கிராம மக்கள் வாலிபர் சங்கத்தின் சார்பில் முடிவு செய்தனர். இதைய டுத்து வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று (பிப்.5) மாநில தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் கிராம மக்களை அழைத்துக் கொண்டு அய்யனார் கோவிலில் பொங்கலிட்டு வழிப் பாடு நடத்தினர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் எம். செந்தில், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், சிபிஎம் வட்ட செயலாளர் கே.முனியாண்டி, ஒன்றிய செயலா ளர்கள் சத்தியராஜ், காளி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 தங்களது உரிமையை மீட்டுக் கொடுத்த வாலிபர் சங்க தலைவர்களுக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். கிராமத்திற்கு நூலகம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த போராட்டம் கார ணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் பெ.சீத் தாராமன், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version