Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

48 மணிநேர போர் நிறுத்தம்: இலங்கை அரசு அறிவிப்பு.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் தற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேற ஒரு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படும் என்று இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம   தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நிறுத்தம் தொடர்பில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் கருத்து எதுவும் வெளியாகவில்லை.

Exit mobile version