தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த பிற்போக்கு அரசுகளதும் ஏகாதிபத்திய நாடுகளதும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு பிரதேசங்களை விடுதலை செய்துள்ளது. புதிய மக்கள் இராணுவம் என அழைக்கப்படும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவு விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களில் நிர்வாகத்தை நடத்த உதவிபுரிகிறது. அப்பிரதேசங்களில் பெரு நிலப்பிரப்புக்களின் நிலங்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மக்கள் நிர்வாகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் உற்பத்தி முறைகளுக்கான செயற்திட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. புரட்சிகர மக்கள் அரசு இப் பிரதேசங்களை நிர்வகித்து வருகின்றது. தேர்தல்கள் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அமெரிக்க அரசால் புதிய மக்கள் இராணுவம் பயங்கரவத அமைப்பாகக் பிரகடனப்படுத்தப்பட்டுதித் தடை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் பயங்கரவாத அமைப்பகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜனப் பிரிவான பிலிப்பைன்ஸ் தேசிய ஜனநாயக முன்னணி பல்வேறு மக்கள் அமைப்புக்களின் ஐக்கிய முன்னணி. இந்த அமைப்புடன் பிலிப்பைன்ஸ் அரசு 2011 ஆம் ஆண்டு பேச்சுக்களை ஆரம்பித்தில் இருந்து புதிய மக்கள் இராணுவத்தின் மீதான தடையை பிலிப்பைன்ஸ் அரசு நீக்கியுள்ளது.
குர்திஸ்தானின் தேசிய விடுதலைக்காகப் போராடுவரும் கம்யூனிஸ்ட் கட்சியான குர்தீஸ் தொழிலாளர் கட்சியும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் உலகில் பலம்பெற்ற கம்யூனிச இயக்கங்களகக் கருதப்படுகின்றன.