Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

45% குழந்தைகள் யுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர்

இலங்கையில் நடைபெற்ற மனித அழிவில் அசாதாரண தொகையில் பாதிப்படைந்தவர்கள் குழந்தைகளே என ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்க்ன்றன.  அண்ணளவாக 3 லட்சம் இடம் பெயர்ந்தவர்களில் 30 ஆயிரம் அங்கவீனர்களும் 45 வீதமான குழந்தைகள் காயங்களுக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது இவ்வறிக்கை. 17 ஆயிரம் குழந்தைகள் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மேலும் தெரிவிக்கும் இவ்வறிக்கை, காயப்பட்ட குழந்தைகளின் தொகை தமக்குத் தெரியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளதாகவும் தெரிகிறது. 3600 குழந்தைகல் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் இன்னொரு அறிக்கை இன்னுமொரு பெரிய தொகையினர் மருத்துவ வசதியின்மை காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
இன்நிலையில்  அப்பாவிப் பொதுமக்களின் ஒருதுளி  இரத்தமும் சிந்தாமல் போர் வெல்லப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Exit mobile version