Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

40 போலிசார் தாக்குதலில் பலி: இந்திய மவோயிஸ்டுக்கள் தாக்குதல்

 
 
 
 
 
ஆந்திராவில் வீரர்கள் சென்ற படகு மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் அந்த படகு அணையில் மூழ்கியதால், அதில் பயணம் செய்த 40 போலிசார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது!மலிகுடா பகுதியில் உள்ள சித்ரகொண்டா அணைப் பகுதியில் நக்சல்களை தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் 50 போலிசார் படகு சென்றுக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் படகு தண்ணீர் மூழ்கியதாகவும் மால்கன்கிரி காவல் கண்காணிப்பாளர் எஸ்.கே. கோஜ்பியே யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். நக்சலைட்டுகள் தாக்குதல் காயமடைந்த 8 வீரர்கள் நீந்தி கரைக்கு வந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கோஜ்பியே கூறியுள்ளார். நீரில் மூழ்கிய வீரர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், விசாகப்பட்டினம் காவல் துறையினர் மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர் உதவி கோரியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கரைக்குத் திரும்பியவர்கள் தவிர மற்ற வீரர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Exit mobile version