கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்க அதிகாரவர்க்கதின் நிர்வாகியாக ஆட்சியைக் கையகப்படுத்திய அந்த நாட்டின் 46 வது ஜனாதிபதி, சிரியா மீதான விமானக் குண்டுத்தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். கமலா ஹரிஸ் மற்றும் ஜோ பைடனின் “ஜனநாயக” ஆட்சி தோன்றிய 35 நாட்களுக்கு உள்ளாகவே அமெரிக்காவின் இராணுவ அதிகார வெறிக்கு புதிய நிர்வாகம் தீனி போட்டுள்ளது. சிரியாவிலுள்ள ஈரானிய ஆதரவு இராணுவக் குழுக்களை இலக்குவைத்து பழி வாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஆதரவுக் செய்திகள் தெரிவிக்க ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஈரான் – சிரிய குழுக்கள் தெரிவிக்கின்றன. ரம் இன் நிர்வாணமான நிர்வாகம் உலகத்தின் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தை இழந்துவந்த நிலையில் அதனை மறு சீரமைக்க புதிய நிர்வாகம் தனது இராணுவ நடவடிக்கையை பரவலாக்கி அப்பாவிகளின் உயிர்களைப் பலியெடுக்கும் என எதிர்வுகூறப்படுகிறது.