Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

3 வது தீர்மானம் சமர்பிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது : ஜீ.எல்.பீரிஸ்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக

குமாரவடிவேல் குருபரன்

அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சிலொன் ருடே என்ற ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தன்னைப் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப் போகிறது என சிங்கள மக்கள் மத்தியில் அனுதாப அலையை ஏற்படுத்தும் ராஜபக்ச கும்பலை மக்கள் தண்டிப்பார்கள். இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான ஆய்வொன்றை குளோபல் தமிழ் நியூஸ் என்ற இணையத்தில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் வடக்கின் சிவில் சமூக கட்டமைப்பு உருவாக்கத்தின் முக்கியஸ்த்தர்களில் ஒருவருமான குமாரவடிவேல் குருபரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்:
ஆசிய மையப் புள்ளி என்ற அமரிக்க அரசின் புதிய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், இனிமேல் ஆசியாவில் தாங்கள் ஆழமாகக் கால்பதிக்க வேண்டும் என்ற முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றனர். தென்சூடான் போன்ற ஆபிரிக்க நாடுகளையும், மத்திய கிழக்கையும் சிதைத்துச் சீர்குலைத்து ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த அமெரிக்க இராணுவம் தெற்காசியாவில் தலையிடுவதற்காக மகிந்த அரசோடு இணைந்து நடத்தும் நாடகம் எதிர்காலத்தில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். பல முள்ளிவாய்கால்களை தோற்றுவிக்கும்.

Exit mobile version