பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பரிந்துரையின்பேரில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதற்கான நியமன உத்தரவை பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் சர்ச்சைக்குரிய பல கொலை நடைபெற்றன. மாவொயிஸ்டுகளுக்கு எதிரான திட்டமிட்ட படுகொலைகள் உட்பட இந்தியா முழுவதும் ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.
ஹாவார்ட் பல்கலைக்கழகப் பொருளாதர பட்டதாரியான சிதம்பரம், அமரிக்கா தலைமையிலான நவ – தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்வதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளார் எனக் கருதப்படுகிறது. நவ தாராளவாதக் கொள்கை இந்தியாவை மேலும் அழிவுக்கு உள்ளாக்கும் எனவும் கருதப்படுகின்றது.