கிறிஸ்துமஸ் கொண் டாட்டங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை இல்லா மல் செய்து விடும் என்று ஆட்சியாளர்கள் கணக்குப் போட்டிருந்தனர். ஆனால் புத்தாண்டுக் கொண்டாட் டத்தோடு புதிய எதிர்ப்பு இயக்கங்களைத் துவக்கவும் தொழிற்சங்கங்கள் திட்ட மிட்டிருந்தது இந்தக் கணக் கை தவிடுபொடியாக்கிவிட் டது. ஜனவரி 1 அன்றே ஏதென்ஸ் உள்ளிட்ட பல் வேறு நகரங்களின் வீதி களில் தொழிலாளர்கள் அரசு எதிர்ப்பு முழக்கங் களுடன் வலம் வந்தனர்.
குறிப்பாக, மருத்துவத் துறை ஊழியர்கள் முதல் நாளன்றே வேலை நிறுத்தத் தோடு தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பள வெட்டு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதை எதிர்த் தும், ஒட்டுமொத்த பொரு ளாதார நடவடிக்கைகளுக் கும் அவர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதனால் நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் பெய ரளவில் ஊழியர்களைக் கொண்டே இயங்கியுள் ளன. நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் மூடப்பட்டிருந்தன. தங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் வேலை நிறுத்தங்கள் அதிகரிப்ப தோடு, மற்ற துறையின ரோடு இணைந்தும் போராட்டங் கள் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.
போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்த கிரீஸ் சுகாதாரத்துறை அமைச்சர், சர்வதேச கடன் நிறுவனங் களுடன் போட்டுள்ள ஒப் பந்தப்படி இத்தகைய நட வடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்று கூறியுள் ளார். இப்படித் தொடர்ந்து சொல்லி வந்ததால்தான் முன்னாள் பிரதமர் பாப் பாண்ட்ரூ பதவியிலிருந்து வெளியேற வேண்டிவந்தது என்று தொழிற்சங்கத் தலை வர்கள் சுட்டிக்காட்டுகி றார்கள்.