Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

23 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் : கடிதம் எழுதிய ஜெயலலிதா

இலங்கை சிறையில் இருக்கும் 23 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் வைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 5 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்து, தமிழகத்திற்கு வேகமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பிரச்சினையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் அந்நாட்டு கடற்படைக்கு அறிவுறுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
இந்திய அரசாங்கம், இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழக பல்தேசிய முதலைகளின் பணப்பசிக்கும் இலங்கை அரசின் இனவெறிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மீனவத் தொழிலாளர்கள் மீது ஜெயலலிதா அக்கறை கொண்டிருந்தால் தமிழக அகதி முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திருப்பார்.

Exit mobile version