ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தலைவரும், அமைச்சருமாகிய ரவுப் ஹக்கிம் தலைமையிலும், மனோ கனேசன் ஏற்பாட்டிலும், நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் 20வது யாப்பு திருத்தம் அல்லது விகிதாச்சார, தொகுதி வாரியான உத்தேச கலப்பு தேர்தல் முறை, சிறுபான்மை கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும், பாதிப்பையும், அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் ஒன்றாக அமையக்கூடாதென, ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, மேற்படி தேர்தல் சீர்திருத்த சட்டம் பாராளுமன்றத்திற்கு அவசர கோலத்தில் கொண்டுவரபப்படக்கூடாது என்றும் சகலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் மலையக மக்கள் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த செயலாளர். அ.லோறன்ஸ் மேற்படி, தேர்தல் சீர்திருத்தத்தில் புதிய எல்லை மீள் நிருணய ஆணைக்குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் கட்டாயம் மலையக மக்களுக்கான தேர்தல் தொகுதிகள் உட்பட எல்லை மீள் நிருணயம் செய்யப்பட வேண்டும்.
உத்தேச எல்லை மீள் நிருணய குழுவில் கட்டாயம் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரும் இடம் பெற வெண்டும். இந்த எல்லை மீள் நிருணயத்திற்கு நாட்டின் சகல இனங்களினதும,; இன விகிதாச்சாரத்தையும் அவர்கள்; வாழும் பகுதியின் புவியியல் தொடர்ச்சி, இனக்கட்டமைப்பு போன்றவற்றை கட்டாயம் கருத்தில் கொள்ளவேண்டுமென்று அவர் மேலும் வலியுறுத்தியதோடு, மொத்தத்தில் 1948ம் ஆண்டு மலையக தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிப்பால், ஏற்பட்ட அநீதிக்கு இந்த தேர்தல் சீர்திருத்தம் ஒரு பரிகாரமாக அமையவேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த சூழலை அதற்காக பயன்படுத்த வேண்டுமென்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தில் தொகுதிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் போது தற்போது நடைமுறையிலிருக்கும், 160 தேர்தல் தொகுதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக்கொண்டிருக்கும், 15 இலட்சம் மலையக மக்கள் சார்பாக காணப்படும் ஒரேவொரு தேர்தல் தொகுதியான நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதி, தலா 75000 வாக்காளர்களைக் கொண்ட நான்கு தேர்தல் தொகுதியாக பிரிக்கப்பட வேண்டும்.
அன்று நுவரெலியா தலவாக்கலை, கொட்டக்கலை, மஸ்கெலியா என்று காணப்பட்ட தேர்தல் தொகுதிகளுக்கு பதிலாக இந்த தேர்தல் சீர்திருத்தம் அதற்கு பரிகாரமாக மீண்டும் 1 நுவரெலியா, 2 அக்கரப்பத்தனை 3 தலவாக்கலை, மஸ்கெலியா ஆகிய தேர்தல் தொகுதிகளை தொகுதிவாரியாக மீண்டும் உருவாக்க வேண்டும்.
இதன் மூலமே 1948ம் ஆண்டு மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் காணமுடியும். அத்தோடு, கொத்மலை, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகள் சிங்கள மக்களும், தமிழ் மக்களுக்கு கலந்து வாழ்வதால் இரட்டை அங்கத்துவர் தேர்தல் தொகுதிகளாக மாற்றப்பட வேண்டும்.
மேலும், பதுளையிலும், கண்டியிலும், தலா இரண்டு தேர்தல் தொகுதிகளையும் இரத்தினபுரியில் ஒரு தேர்தல் தொகுதியையும் கொழும்பு, மாவட்டத்தில் இரு தேர்தல் தொகுதிகளையும், உருவாக்கி குறைந்தது 12க்கு மேற்பட்ட தொகுதிகள் உருவாக்கப்படவேண்டும். விகிதாச்சார முறையில் கீழ் நுவரெலியா பதுளை, கண்டி, இரத்தினபுரி, கொழும்பு ஆகிய பகுதிகளில் குறைந்து 6 பாராளுமன்ற உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்படக்கூடிய வகையில் மாவட்ட விகிதாச்சாரமுறை அறிமுகப்படுத்த வேண்டும்.
1947ல் கோல்பரி ஆணைக்குழு அதன் சிபாரிசின்போது, மலையக மக்கள் சார்பாக 14 பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து, அப்போது அன்றைய 101 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் அன்று 8 பேரே தெரிவு செய்யப்பட்டனர். ஆகவே புதிய தேர்தல் சீர்திருத்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகக் கொள்ளப்பட்டால் மலையக மக்களின் இன விகிதாச்சாரப்படி 16 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும். அத்தொகை 255 ஆக அமையுமாயின் 18 பேரை தெரிவு செய்யப்படவேண்டும். எனவே உத்தேச கலப்புமுறை தேர்தல் சீர்திருத்தம் மலையக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரமாக, அமைய வேண்டுமென்றே சகலரும் எதிர்பார்க்கின்றனர் என தனது அறிக்கiயில் குறிப்பிட்டுள்ளார்.