இதன் பின்பும் இந்த நாடுகளை அழைத்துவந்து ராஜபக்சவைத் துக்கிலிடப்போகிறோம் என்று அரசியல் பிழைப்பு நடத்தும் இனவாத தமிழ்த் தலைமைகள் ராஜபக்சவின் நண்பர்களே.
ராஜபக்ச தலைவரன பின்னர் போர்க்குற்ற விசாரணை என்பது இலங்கை அரச அதிபருக்கு எதிரானது என்ற நிலைமையைக் கடந்து பொதுநலவாய நாடுகளின் தலைவருக்கு எதிரானது என்ற நிலை உருவாகும். இதற்கு எதிராக பிரித்தானியா உட்பட பொதுநலவாய நாடுகள் ராஜபக்சவின் பாதுகாவலர்களாச் செயற்படுவார்கள். இவை எதனையும் கருத்தில் கொள்ளாது இலங்கை இனப்படுகொலைக்கு அத்தனை ஆதரவுகளையும் வழங்கிய இந்திய அரசின் எல்லைக்குள் நடக்கும் அனல் பறக்கும் விவாதம் என்ற கேலிக்கூத்து கீழே.