25.12.2008.
புத்தாண்டு தினத்தன்று உலகின் மக்கள் தொகை 6.75 பில்லியனாக இருக்கும் என ஜெர்மனியைச் சேர்ந்த உலக மக்கள்தொகை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், 2008ஆம் ஆண்டில் மட்டும் உலக மக்கள் தொகை 8.2 கோடி உயர்ந்துள்ளதாகவும், 2009 ஜனவரி முதல் தேதியன்று உலக மக்கள் தொகை 675 கோடியே 16 லட்சத்து 43 ஆயிரத்து 600 ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதில் வளரும் நாடுகளில் மக்கள் தொகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும், இதற்கு கருத்தடை சாதனங்கள், மருந்துகள் கிடைக்காததே முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டுமென்றால், தேவையற்ற கர்ப்பத்தை தடுப்பதே சிறந்த வழியாக இருக்கும் எனத் தெரிவித்த உலக மக்கள்தொகை அமைப்பின் செயலர் ரெனேட், செக்ஸ் கல்வி, கருத்தடை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த கூடுதலாக செலவிட தங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.