Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

2008ஆம் ஆண்டு புகலிடம்கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

25.03.2009.

இலங்கையில் தொடரும் மோதல்களால் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2008ஆம் ஆண்டு புகலிடம்கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை 12 வீதத்தால் அதிகரித்திருப்பதுடன், 51 நாடுகளிலிருந்து 383,000 பேர் புகலிடம்கோரி கடந்த வருடம் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, ஈராக்கிலிருந்து மாத்திரம் 40,000 பேர் புகலிடம்கோரி விண்ணப்பித்திருப்பதாகக் கூறுகிறது.
சோமாலியா, ருசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும், மோதல்கள் அதிகரித்துச் செல்லும் இலங்கை மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தும் பெருமளவான மக்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இலங்கையிலிருந்து 2008ஆம் ஆண்டு 9,678 பேர் புகலிடம் கோரியிருப்பதுடன், 2007ஆம் ஆண்டு 7,792 ஆகக் காணப்பட்ட இந்த எண்ணிக்கை தற்பொழுது மொத்தம் 17,470 ஆக அதிகரித்துள்ளது. 
புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் கடந்த இரண்டு வருடத்தில் இலங்கை 12வது இடத்திலுள்ளது. கடந்த வருடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 38 நாடுகளில் 13,903 பேர் புகலிடம் பெற்றனர்.
பெரும்பாலும் புகலிடம் கோருபவர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதற்கே கூடுதலாக விரும்புவதுடன், புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களில் 13 வீதமானவர்கள் அமெரிக்காவுக்கே செல்ல விரும்புகின்றனர்.  
அமெரிக்காவுக்கு அடுத்ததாக கடனா, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானிய ஆகிய நாடுகளுக்கே புகலிடம்கோரி மக்கள் செல்கின்றனர். 2007ஆம் ஆண்டு கூடுதலாகப் புகலிடம் வழக்கும் இரண்டாவது நாடாகவிருநத சுவீடன் தற்பொழுது புகலிடம் வழக்கும் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டுள்ளது. புகலிடம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் 17வது இடத்திலிருந்து நோர்வே 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Exit mobile version