2005 தேர்தலில் ராஜபக்சவை வெற்றிபெற உதவிய புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை :சம்பந்தன்
இனியொரு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் சம்பந்தன் தமக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை எனத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாத நேரத்தில் பாராளுமன்றத்தில் இக்கருத்தைத் தெரிவித்தார். 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குகளை உங்களுக்குச் சார்பாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகள் உங்களுக்கு உதவினார்கள் என்பதை மறுப்பீர்களா என அரசாங்கத்தரப்பைப் பார்த்து வினவிய சம்பந்தன், என்னை அல்லது எங்களைவிட உங்களுக்குத் தான் புலிகளுடன் அதிக தொடர்பு இருந்தது என்று குறிப்பிட்டார். நாங்கள் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்காகத் தேவை ஏற்பட்ட வேளையில் புலிகளுடன் இணைந்து செயற்பட்டோம் அதற்கு மேல் எந்தத்தொடர்பும் இருந்ததில்லை என சம்பந்தன் குறிப்பிட்டார்.
தமிழிழ விடுதலைப் புலிகளின் நேரடி அடியாட்படை போன்று செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும் புலிகள் அழிக்கப்பட்டதும் தலைகீழாக உண்மையை மறைக்கின்றனர். இந்தியாவினதும் அமரிக்காவினதும் குரலை ஒலிக்கும் சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச பாசிசத்தோடு செயற்பாட்டளவிலான முரண்பாட்டை மட்டுமே கொண்டுள்ளனர்.