Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

20 20 கிரிக்கட் போட்டி காவு கொண்ட மலையக இளைஞனின் உயிர் உலகமயமாதலின் மற்றும் ஒரு வெட்கக் கேடு : சை.கிங்ஸ்லி கோமஸ்

அட்டன் குடா ஓயா பிரதேசத்தில் 20 20 கிரிக்கட் போட்டியின் இறுதி தினத் தன்று இலங்கை அணி தோல்வியுற்றதனால் தற்கொலை செய்துக் கொண்ட இளைஞனின் முடிவு எதனைக் கூறி நிற்கின்றது ஆங்கில சர்வாதிகாரம் விதைத்த நச்சு தாவரம் இன்று பெரு விருட்சமாகி உலகை ஆட்டுவிக்கினறது இன்ரைய அரசியலுக்கும் அத்தியாவசியமான கிரிக்கட் உலகை ஸ்தம்பிதமடையச் செய்யும் மாய வித்தைகளில் ஒன்ரென்ரால் மிகையாகாது மகேந்திரன் சுரேந்திரன் என்னும் மலையக இளைஞன் தன்னுயிர் மாய்ப்பதற்கு கேவலம் கிரிக்கட் போட்டி ஒருகாரணம் என்றால் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்த மற்றும் ஒரு இளைஞனும் இதன் காரணத்தினாலேயே தற்கொலை செய்துக் கொண்டான் என்றால் இலங்கையின் கல்வி நிலைமையினை என்னவென்று கூறுவது.வர்த்தக மயமாகிப் போன கிரிக்கட் விளையாட்டு இலங்கையின் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாகும் மக்களின் சிந்தனையை கிரிக்கட் என்னும் மாயைக்குள் அடக்கி வைத்து அத்தியாவசிய பொருடகளின் விளையேற்றம் முதற் கொண்டு தமிழ் மக்களின் சய நிரனய உரிமை வரை மரக்க செய்யும் மாய உலகு கிரிக்கட் இதன் விபரீதங்கள் தற்கொலை மாத்திரம் அல்ல கொலைகளையும் செய்யத் தூண்டும் அலவிற்கு அதி பயங்கரமானது 20 20 கிரிக்கட் போட்டிகளுக்கான நுளைவு சீட்டுக்களை கையாடல் செய்த ஐரோப்பியர் முதல்கொண்டு 50 ரூபாய் நுளைவு சீட்டுக்களை 1500 ரூபாவிற்கு விற்பனை செய்த சிறிய வியாபாரிகள் வரையும் இது மாத்திரம் அன்றி கோடி கோடியாய் பணம் தேட இலங்கை வந்து குவிந்த சூதாட்ட கோமான்கள்,கிரிக்கட் கால விபச்சார வியாபாரிகள் என்று ஏராளமான அசிங்கங்கள் அரங்கேரிய இந்த கிரிக்கட் சாக்கடைக்காக தற்கொலை செய்துக் கொள்வது உலக மகா முட்டமாலதனமாகும் இலங்கையின் கல்வி இது போன்ற விடயங்களில் மக்களுக்க அறிவூட்டம் கல்வியாக அமைய வேண்டியது காலத்தின் தேவையாகும்

Exit mobile version