Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

20 வருட கடுழியச் சிறைத்தண்டனை.

 

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.

வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால கடுழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்த திசநாயகம் அவுட்றீச் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 2006 ‐ 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவரால் வெளியிடப்பட்ட நோர்த் ஈஸ்டன் மனத்லி என்ற சஞ்சிகையில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் கட்டுரைகளை எழுதியது பிரசுரித்தது வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டக்கள் அவர் மீது சுமத்தப்பட்டு நடாத்தப்பட்ட விசாரணையிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட திஸ்ஸாநாயகம், விசாரணைகள் ஏதுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version