கஷ்மீரில் சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிவரும் போராளிகள் மீதும் மக்கள் மீதும் இந்தியப் பாதுகப்புப் படைகள் ஒடுக்குமுறையைப் பிரயோகித்து வருகின்றன. கஷ்மீரின் தலை நகர் ஸ்ரீநகரில் வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த போலிசார் அங்கு தங்கியிருந்த போராளிகளை நோக்கித் துப்பாக்கிப் பிரையோகம் நத்தினர். இத் துப்பாக்கிச் சமர் 20 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன் போது இரண்டு போராளிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படைகளின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பச்போரா பகுதியில் தேடுதலில் ஈடுபட்டிருந்த போலீசாரே இத்தாக்குதலை மேற்கொண்டனர் எனத் தெரியவருகிறது.
2 போலீசார் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த அபு ஹூசைபா, சோட்டா ஹபீஸ் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் நடந்துள்ள 2வது என்கவுன்டர் சம்பவம் இது. முன்னதாக, தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை போலீசார் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர்.