2002 லிருந்து 2007 வரை 440 போலி மோதல் கொலைகளும் உ.பி யில் மட்டும் 231 போ.மோ.கொலைகள் என்பது தங்களுக்குத் தெரியுமா?
தேசிய மனித உரிமை ஆவணத்தின்படி 2008லிருந்து 2009 வரையான ஒரே ஆண்டில் 369 பேர் போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இதன் பின்னே எந்த இனத்தின் அரசியல்?
2009 லிருந்து2013 வரை 555 போலி மோதல் கொலைகள் இதில் மணிப்பூர் 62,அஸ்ஸாம் 52, மே.வங்களம் 35,ஜார்கண்ட் 30,சட்டீஸ்கர் 26,தமிழ் நாடு 23,ம.பிரதேசம் 20. இதற்குப் பின்னால் இயற்கை வளக் கொள்ளை எனும் கொடூர அரசியல் இருப்பது தங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?
சொராபுதீன் என்பவர் போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டது எந்த இனத்திற்காக?
போலி மோதல் கொலைகளுக்குப் பின்னால் எந்த இனத்தின் அரசியலும் இல்லை.
அவர்களின் துப்பாக்கி உமிழ்வது இனத்தின் அரசியலை அல்ல. அவர்களுக்கான அதிகாரத்தின் பலத்தை.
சாலமன்
நன்றி : https://www.facebook.com/solomonpathipooranam?fref=nf&pnref=story