பல்தேசியக் நிறுவனங்களின் பகற் கொள்ளையால் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் 43 மில்லியன் ஏழைகளும் உழைக்கும் மக்களும் உணவுப் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஐம்பது வருடங்களில் மிக மோசமான மனிதாபிமானப் பிரச்சனை என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் பாதிப்படையும் போது அவர்களைப் போராடாமல் தடுத்து தற்காலிகமாக உற்க்க நிலையில் வைத்திருப்பதற்காக தன்னார்வ நிறுவனங்கள் முயற்சிப்பது வழமை. உணவற்ற பிரித்தானியர்களுக்கு எலும்புத்துண்டை வீசும் செஞ்சிலுவைச் சங்கம் பிரித்தானியாவை நாளாந்தம் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் குறித்து துயரடைவதில்லை.
120 மில்லியன் ஐரோப்பியர்கள் மத்தியில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்ட தன்னார்வ நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத முதலாளித்துவ அமைப்பியல் நெருக்கடிக்குள் அமிழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் சில குறுகிய வருடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.