Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

1930 இற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் நெருக்கடி – பிரித்தானியப் பொருளாதாரம் சரிகிறது.

பிரித்தானியா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியிருப்பதாக இன்று இங்கிலாந்து வங்கியின் ஆளுனர் உட்படப் பலரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வங்கி இன்று 75 பில்லியன் பவுண்ஸ் பணத்தை இன்று மேலதிகமாக இலத்திரனியல் புழக்கத்திற்கு உருவாக்கியுள்ளது. மேலதிகமான பணத்தை அச்சிடுவதற்குப் பதிலாக வங்கிகளில் பண இருப்பை மென்பொருள் அளவில் அதிகரிப்பதற்கு பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் உடனடியாகப் பணவீக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
ஏற்கனவே 200 பில்லியன் பணத்தை வங்கிகளுக்கு வழங்கியும் நெருக்கடிகள் அதிகரித்தவாறே உள்ளன நிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக இங்கிலாந்து வங்கி தெரிவிக்கின்றது.
1930 இல் ஏற்பட்ட நெருக்கடியின் பின்னர் இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என வங்கியின் ஆளுனர் மேர்வின் கிங் தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களின் வரிப்பணத்தின் மூலமே இத் தொகை ஈடுசெய்யப்படும். குறித்த விரல்விட்டு எண்ணத்தக்க பணமுதலைகளிடம் பணம் குவிந்துள்ள நிலையில், அவர்களிடமே மக்களின் வரிப்பணத்தைச் சேர்பிற்கும் முயற்சியே இதுவாகும்.

Exit mobile version