ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலால் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்’ பதில் தாக்குதல்களில் எழு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இன்று உள்ளூர் நேரம் அதிகாலை மூன்று மணியளவில் தாம் தாக்குதல் தாக்குதல் நடைபெற்றதாக காஸி அபாத் மாநிலத்தின் நிர்வாக சபை தெரிவித்தது. . இராணுவச் சோதனைச் சாவடி ஒன்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஆப்கான் தேசிய இராணுவம் அந்த நாட்டின் அதிபர் ஹமீத் கார்சாய் அரசின் இராணுவமாகச் செயற்படுகிறது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான ஹமீச் கர்சாய் அவ்வப்போது அமெரிக்க அரசிற்கு எதிராக நாடகமாடுவார். சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த போது ஆப்கானிஸ்தானில் தானும் தலையிடும் நோக்கோடு முஜாகிதீன்களையும் தலிபான்களையும் வளர்த்த அமெரிக்கா, இன்று வரை தனது ஆக்கிரமிப்பை நேரடியாகவும் பொம்மை அரசினூடாகவும் தொடர்கிறது.
தாக்குதலில் காயமடைந்த இராணுவத்தினர் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள வளங்களையும் கனிமங்களையும் அபகரிப்பதற்காக உலகிலுள்ள அதிகார வர்க்கங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 2001 11ம் ஆண்டிலிருந்து போராடிவருகின்றனர். இதுவரை தலிபான்களை அழிக்கமுடியாவில்லை என்பது ஒரு புறமிருக்க தவறான அரசியலை அடிப்படையாகக் கொண்ட தலிபான்களின் போராட்டம் வெற்றியடைய முடியாது என்பது கண்கூடு.