விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே திங்களன்று சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாகப் படைத்தரப்பு பொய்ப் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர்கள் கொல்லப்பட்டனர் என தமிழ்நெட் இணைய தளத்தை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தித் தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மக்கள் கொல்லப்பட்ட இடத்தைப் படம்பிடித்துக் காட்டியிருந்த இராணுவத் தரப்பு அங்கு படையினருக்குச் சேதங்கள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை. அத்துடன் குண்டு வெடித்துக் காயம் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்களிலேயே மக்கள் கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே திட்டமிட்ட ரீதியில் சர்வேதச ஒத்துழைப்புடன் இனப்படுகொலையைக் கொடூரமாகப் புரிந்துவரும் இலங்கை அரசின் இன்னொரு படுகொலை வடிவம் இதுவென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் மக்களின் படுகொலை குறித்து வாய் மூடி மௌனம் காக்கும் அமெரிக்கா (தூதர்) முதல் மனித உரிமைகள் அமைப்புகள் வரை உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து ஆராயாமல் பிரசாரங்களைத் தொடங்கியிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது