Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு – பொது மக்கள், புத்தி சீவிகள், தயா மாஸ்டர் சாடசியம்

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை அமர்வுகைள நடாத்தி வருகிறது. ஆணைக்குழவின் முன், போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவு மக்களும், புத்திசீவிகளும் மற்றும் தயா மாஸ்டரும் சாட்சியமளித்துள்ளனர்.

ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளித்த பொதுமக்கள் பலர் காணமல் போன உறவினர்களை மீட்டுத்தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். சாவகச்சேரியில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில், 13 வயது சிறுமியான இலக்கியா சாட்சியமளித்த போது, தந்தையை செல் தாக்குதலில் பறிகொடுத்தேன், சிகிச்சைக்கென இராணுவத்தினர் கூட்டிச் சென்ற தாயார் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை அம்மாவின் நினைவுகள் உயிரை வாட்டுகின்றன எனக்கூறியிருக்கிறார்.

கணவன்மாரை இழந்துள்ள பெண்கள் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்குவது குறித்தும் தங்களுக்குப் பொருளாதார உதவிகள் பெற்றுத்தருமாறும் சாட்சியமளித்துள்ளனர். கணவர் ஷெல் தாக்குதலில் இறந்து விட்டார். நான் மூன்று பிள்ளைகளுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்குப் பொருளதார உதவிகளை வழங்கும்படி பரிந்துரை செய்யுங்கள் என பெண்ணொருவர் சாட்சியமளித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் நடந்த அமர்வில் சாட்சியமளிக்கையில் இ.தாமோதர ராஜா, நானும் கொழும்பில்தான் பிறந்தேன். அங்கு 8 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். எனக்கும் அங்கு அரசு காணி வழங்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் கலாநிதி. ஜீவரத்தினம் ஹ_ல்  சாட்சியமளிக்கும் போது, புலிகள் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தமையினால் நான் நாட்டை விட்டு வெளியேறினேன். ஆனால், இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள் தேசிய நல்லிணக்கத்தை முன்னிட்டு மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும் என ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கேற்ப நான் மீண்டும் இலங்கை வந்தேன். நாடடிலிருந்து வெளியெறிய ஏனைய மக்களில் அதிகமானோரும் இங்கு வந்து பணியாற்றுவதற்கு எதிர்பர்ப்புடன் இருக்கின்றனர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த போராசியர் சி.க. சிற்றம்பலம், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை அரசியலமைப்பில் உறுதி செய்வதே தீர்வுக்கு வழி எனத் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சாட்சியமளித்த போது, பத்திரிகை ஆரம்பித்திருந்த காலத்திலிருந்து பல இடுக்கண்கள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள், பணியாளர்களின் உயிரிழப்புக்கள், உடைமை இழப்புக்கள் மத்தியிலும் மக்களுக்கு தகவல் சொல்லும் ஜனநாயகாப் பணியைச் செய்து வந்ததாகத் தெரிவித்திருந்தார். உதயனின் பணிகுறித்து ஆணைக்குழு தலைவர் ‘இந்த நாட்டில் செய்தியை மக்களுக்கு வழங்குதவற்காக உங்கள் பத்திரிகை அளப்பரிய பணியைச் செய்திருக்கிறது. இந்த நாட்டினுடைய ஜனநாயக செயற்பாட்டிற்கு நீங்கள் ஆற்றிவரும் பங்கை உண்மையாகவே மதிக்கிறோம்” எனப்பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.
ஊர்காவற்றுறையில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளித்த முன்னாள்
 
விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை பேச்சாளரான தயா மாஸ்டர் சாட்சியமளித்துள்ளார். தயா மாஸ்டர் சாட்சியத்தில்,
சமாதான உடன்படிக்கையின் முறிவும் புறக்கணிப்பும் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்தமை போன்றவற்றாலேயே நான் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகத் தீர்மானித்தேன் எனவும், போர் உக்கிரமடைந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்: கொல்லப்பட்ட உயிர்களுக்காக நான் வருந்துகின்றேன் எனவும், யுத்தம் தீவிரமடநை;த போது சமாதானத்தை  விரும்பிய விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் புலமையாளர் சிலரும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி விடுதலைப் புலிகளின் ஆலேலசாகரான பாலகுமாரன் ஊடாக தலைவர் வே. பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம், அதற்கு ஏமாற்றமே கிடைத்த நிலையில் போர் மிகவும் உச்ச நிலையை அடைந்து விட்டது, அந்நிலையில் அரசுடன் இணைவதால் சமாதானமாக வாழலாம் என எண்ணிய பலரில் நானும் ஒருவன், 28 ஏப்ரல் 20009 அன்று மக்களுடன் மக்களாக சரணடைந்த போது எம்மை மக்களிடமிருந்து வேறாக்கிய இராணுவத்தினர் எம்மை நன்றாகவே நடத்தினர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

சரணடைந்த மக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்று கருத்துக் கூறமுடியாது எனவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். வன்னியில் யுத்த சூனியப் பகுதி என்று எந்தவொரு இடமும் அமுலில் இருக்கவில்லை, அத்துடன் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயத்தினை யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் மதிக்கவில்லை எனவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version