இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக விசா வழங்கும் முறையில் எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தை வரும் அக்டோபர் மாதத்திலிருந்து அமல்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.பாகிஸ்தான், சுடான், ஆப்கானிஸ்தான், இரான், இராக், நைஜீரியா, இலங்கை மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் ஏன் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
விசா நடைமுறைகளில் நிறவாததைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையானது. ஐரோப்பிய நாடுகளில் இலங்கைப் பெற்றோர்களுக்குப் பிறந்து அந்த நாடுகளின் பிரசா உரிமை பெற்றவர்களுக்கு அதே நாடுகளின் வெள்ளையினத்தவர்களுக்கான நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. பிரன்ஸ் நாட்டின் வெள்ளை நிறத்தவர்களுக்கு விசா வழங்கப்படும் போது கேட்கப்படும் ஆவணங்களிலும் அதிகமான ஆவணங்களை இலங்கையை மூலமாகக் கொண்ட பிரஞ்சுப் பிரசைகளிடம் கேட்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் பிரசா உரிமைபெற்ற இலங்கையர்களுக்கு நிற அடிப்படையில் வேறுபாடுகாட்டும் இந்திய அரசின் விசா விதிமுறைகள் அடிப்படையில் நிறவாதப் பின்புலத்தைக் கொண்டது. இதே வகையிலேயே ஐரோப்பியப் பிரசா உரிமை பெற்ற பாகிஸ்தானிய, பங்களாதேசிய மூலத்தைக் கொண்டவர்களையும் இந்தியத் தூதரகங்கள் நடத்தி வருகின்றன.