இந்த வகையில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையும் பயனுடையதாகிறது. உலகத்தின் சமூகப் பாதுகாப்பு அறிக்கை என்று தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வில் உலக மக்கள்தொகையில் மிகப் பெருபான்மையினர் அத்தியாவசிய சமூக பாதுகாப்புகள் இல்லாமல் இருப்பதுடன், ஒவ்வொரு நாளும் ஐந்து வயதிற்கு குறைந்த 18,000 குழந்தைகள் மரணிக்கின்றனர் என்கிறது.
குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நலன்களுக்காக அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 0.4 சதவீதம் மட்டுமே ஒதுக்குகின்றன, இது மேற்கு ஐரோப்பாவில் 2.2 சதவீதத்திலிருந்து ஆபிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக்கில் 0.2 சதவீதம் வரை என வேறுபடுகிறது. இது போன்ற நலன்களுக்காக அமெரிக்கா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.699 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது—இது இலத்தீன் அமெரிக்காவை விடவும் சற்று குறைவாகும். ஆனால் அதற்கு நேரெதிராக, அமெரிக்கா இராணுவத்திற்கு அதன் பொருளாதார வெளியீட்டில் 4.2 சதவீதத்தை செலவிடுகிறது.
“சமூக பாதுகாப்பின் அவசியம் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது என்ற போதினும், சமூக பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமை உலக மக்கள்தொகையின் பெரும்பான்மையினருக்கு கிடைப்பதில்லை,” என்று அந்த அறிக்கை தீர்மானத்திற்கு வருகிறது. , “மத்திய மற்றும் குறைந்த வருமான நாடுகளின் மக்கள்தொகையில் பாதிப் பேர் இவ்வாறுதான் உள்ளனர். அவர்களில் பலர், அதாவது சுமார் 800 மில்லியன் மக்கள், உழைக்கும் ஏழைகளாக உள்ளனர், மற்றும் பலர் உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தில் வேலை செய்கின்றனர்,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் குழந்தைகளின் மரணிக்கும் அவலக்குரலின் மத்தியில் சமூகத்தின் இன்னொரு பகுதி ஆடம்பரமாக வாழ்க்கிஅ நடத்துகிறது.