அதன் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் சிங்கப்பூர் விமானப்படை, கடற்படையும் களமிறக்கப்பட்டது. தற்போது இந்த விமானம் பெலிடங் தீவிலிருந்து 80 முதல் 100 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடந்து வருகிறது.
விமானத்தில் மொத்தம் 162 பேர் இருந்துள்ளனர். அதில் 149 பேர் இந்தோனேசியர்கள் ஆவர். பிரித்தானிய நேரப்படி நேற்று (27.12.14) இரவு 11.17 மணியுடன் விமானத்திற்கும், தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு விமானம் என்ன ஆனது என தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அரசும் அதன் துணை நாடுகளும் உலக மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத யுத்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் வெளியாகவில்லை.
கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் இவ்வாறான சம்பவங்களில் அமெரிக்க அரசின் கரங்கள் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
கடந்தவாரம் மலேசிய விமானம் காணாமல் போனது தொடர்பாக பிரஞ்சு நாட்டு எழுத்தாளர் ஒருவர் புதிய தகவல்களை வெளியிட்டிருந்தார்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு மார்ச் மாதம் 8ம் திகதி, 2014 ஆம் ஆண்டு நள்ளிரவு கடந்து ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகப் புறப்பட்ட என்ற விமானம் காணாமல் போனது. அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்தது எனத் தகவல்கள் வெளியாகின.
இவ்விமானம் அமெரிக்க இராணுவத்தாலேயே சூட்டு விழுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.போர்தூஸ் ஏர்லைன்ஸ் என்ற பிரஞ்சு நாட்டின் உள்ளூர் விமான சேவை ஒன்றின் முன்னைநாள் அதிபர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பிரபல பத்திரிகையன பரிஸ் மச் இல் வெளியான ஆறு பக்கக் கட்டுரை ஒன்றில் அதற்கான ஆதரங்களை அவர் முன்வைத்திருந்தார். பிரித்தானியாவினால் ஆக்கிரமிக்கப்படு அமெரிக்க இராணுவத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள டியகோ கார்சியா என்ற தீவை அண்மித்த போதெ விமானம் அமெரிக்க இராணுவத்தால் சுட்டு விழுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
டியாகோ கார்சிய அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த விமானம் செல்வதாகச் சந்தேகித்தே அமெரிக்க இராணுவம் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது என அவர் தெரிவித்த கருத்து அமெரிக்காவைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்திருந்தது.
டியாகோ கார்சியாவிற்கு அருகாமையிலுள்ள மாலைதீவின் தீவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் விமானம் தாளப்பறந்தைக் கண்டதாகவும், பாராஹ் தீவு என்ற அந்த இடத்தில் விமானத்தின் பாகம் ஒன்ற மாலைதீவு இராணுவம் கைப்பற்றியது தொடர்பான புகைப்படத்தை தீவின் மேயர் காண்பித்ததாகவும் கூறுகிறார்.
விமானம் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க வேண்டாம் என பிரித்தானிஅ உளவுத்துறையல் எச்சரிக்கப்பட்டதாகவும், அதனை உளவுத்துறையிடமே விட்டுவிடுமாறு கோரியதாகவும் தெரிவிக்கிறார்.
மார்க் டூகான் என்ற முன்னை நாள் விமானச் சேவை அதிகாரியன இவரின் கூற்று வெளியான சில நாட்களுக்கு உள்ளாகவே மற்றொரு விமானம் மாயமகியுள்ளது.
http://www.dailymail.co.uk/news/article-2883651/U-S-military-shot-MH370-thought-hacked-used-terror-attack-claims-former-airline-boss.html