தமிழ்ப்பெண்கள் 15 பேரை சிங்கள ராணுவம் கதற கதற கற்பழித்து பின்னர் படுகொலை செய்துள்ளது. பின்னர், சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறி துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது.
-என வை.கோ தேர்தல்கால உணர்ச்சி அறிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் அவலத்தையும் அழுகுரலையும் விற்பனைப் பண்டமாக மாற்றிய தென்னிந்திய தமிழ் அரசியல்வாதிகளுள் வை.கோபாலசாமிக்கு முதலிடம் கொடுக்கலாம். இந்தியாவின் ராஜபக்சவான நரேந்திர மோடி என்ற ஹிட்லரின் சீடனுடன் இணைந்து கொண்டு ஈழ மக்களின் அவலங்களை வாக்குகளாக மாற்ற முயலும் வை.கோ இப்போது செனல் 4 இற்கு தானே தகவல் கொடுத்தது போன்ற விம்பத்தை ஏற்படுத்த முனைகிறார். போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வெளியுலகத்திற்குக் கொண்டுவந்த நூற்றுக்கணக்கான சிங்கள தமிழ் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மௌனமாயிருக்க, ஈழப் பெண்களின் கொலையில் வை.கோ வாக்குத் திரட்டுகிறார்.
தொடரும் கோபாலசாமி,
‘அத்துடன் முடியவில்லை கொடுமை. உடல் பகுதியில் துப்பாக்கிகளை கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத்துணியாதது. இந்த கொடிய சம்பவம் காணொளியாக சேனல்–4–ல் விரைவில் வெளியாகக்கூடும்.
எனவே, இலங்கைத்தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும்.’
அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
ஆயிரமாயிரமாய் மண்ணோடு மண்ணாகி மடிந்துபோன போராளிகளதும் மக்களதும் தியாகங்கள் வாக்குப் பொறுக்கிகளுக்குத் தீனிபோடுகிறது. ஈழப் போராட்டம் மக்கள் சார்ந்த போராட்டமாகத் உருவாகும் போது வை.கோ போன்றவர்கள் ஈழ அரசியலிலிருந்து அகற்றப்படுவார்கள்.