08.11.2008.
14-வது கொல்கத்தா திரைப் பட விழா நவம்பர் 10 முதல் கொல்கத் தாவில் நடைபெறும் என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறி னார்.
உலகம் முழுவதிலும் இருந்து அண்மையில் வெளியான 276 திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படும். இந்தியாவில் இருந்து 17 திரைப்படங்களும், 44 குறும்படங்களும், எட்டு ஆவணப் படங்களும், 7 குழந் தைகள் படங்களும் திரையிடப் படவுள்ளன.
62 நாடுகளில் இருந்து 100 சர்வ தேசப் படங்கள் பங்கேற் கின்றன. இவற்றில் பெரும்பாலா னவை லத்தீன் அமெரிக்க திரைப்படங்களாகும். இவ் வாண்டு பிரான்சின் மாபெரும் நகைச்சுவை நடிகன் ஜேக்கஸ் டாடியின் பிறந்த நாள் நூற் றாண்டு நடைபெறுகிறது. ஜேக் கஸ் டாடியின் மூன்று புகழ் பெற்ற திரைப்படங்கள் தி பிக்டே, மோசியர் ஹுலோட்ஸ் ஹாலிடே மற்றும் மை அங்கிள் அண்ட் பிளே டைம் ஆகியவை விழாவில் திரையிடப்படும்.
இதுதவிர சத்யஜித் ரேக்கு பிடித்த ஹாலிவுட் படங்களும், மறு வடிவமைக்கப்பட்ட ரேயின் படங்களும் திரையிடப் படும். திரைப்பட விழாவில் குறும்பட தயாரிப்பாளர்கள் தங்களுடைய கலைப் படங் களை வெளியிட வாய்ப்பளிக் கப்படும் என்றும், உலகம் முழு வதும் படங்கள் விற்பனையா வதற்கு உதவியாக திரைப்படச் சந்தையும் இருக்கும் என்றும் முதல்வர் புத்ததேவ் கூறினார்.
திரைப்பட விழாவிற்கு ரூ.1.40 கோடி அளவிலான வரவு, செலவு திட்டமிடப்பட்டுள் ளது. இத்தொகை படங்களை வாங்குவதற்காக மேற்கு வங்க அரசிடம் அளிக்கப்படும். விருந் தோம்பல் உள்ளிட்ட விருந் தினர் செலவுகளை புரவலர்கள் ஏற்றுக் கொள்வர் என்றும் அவர் கூறினார்.