Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

13 வது திருத்தச் சட்டம் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தின் அடிமைச் சாசனம் – குருபரனின் பகுப்பாய்வு

13 வது திருத்தச் சட்டம் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தினால் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்ட அடிமைச் சாசனம் பேரினவாத ஒடுக்குமுறையின் வரம்புகளுக்குள்ளேயே முடங்கியிருப்பது குருபரனின் கீழ்வரும் உரையில் தெளிவுபடுத்தப்படுள்ளது. யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திரு. குருபரன்.குமாரவடிவேல் அவர்கள் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

13வது திருத்தச் சட்டம், அது வரைவாக்கப்பட்ட காலப்பகுதி, என்பன குறித்த பகுப்பாய்வை அவர் முன்வைக்கிறார். அமரிக்காவும் இந்தியாவும் இணைந்து தமிழ்ப் பேசும் மக்களின் தலையில் சுமத்த முனைகின்ற இந்த ஏமாற்றுச் சட்டத்தைக் கூட பேரினவாத அரசாங்கங்கள் அமுலாக்க மறுக்கும் அளவிற்கு சிங்கள மக்கள் அரசியல் வாதிகளால் நச்சூட்டப்பட்டுள்ளனர். அண்மையில் அமைச்சர் திஸ்ஸ விதாரண இதனை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருந்தார்.

Exit mobile version