13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படுத்தப்படவில்லை, அவ்வாறான உடன்படிக்கை இல்லாமையினால் அரசியலமைப்பிலிருக்கும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என ஜாதிக ஹெல உறுமைய என்ற பௌத்த சிங்கள அடிப்படைவாதக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த சம்பிக்க ரனவக்க என்பவரே ராஜபக்ச அரசைத் தொடர்ந்து இப்போதும் மின் வலு அமைச்சராகச் செயற்படுகிறார். யாழ்பாணப் பிரதேசம் முழுவதையும் நச்சாக்கி கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடும் சம்பிக்க சார்ந்த கட்சி 13வது திருத்தம் கூட நடைமுறைக்கு வராது எனத் தெரிவித்துள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கட்சிகளுக்கு இடையில் இன்னமும் இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் திட்டத்திற்கு மட்டுமே ஜாதிக ஹெல உறுமய கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் 13ம் திருத்தச் சட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்துவது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் கட்சிகளுக்கு இடையில் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.