13வது திருத்தம்-அமுற்படுத்தவும் இயலாது;அப்பாற் செலவும் முடியாது:தோழர் இ. தம்பையா

இன்னும் ஒரு மாத காலத்தில் திஸ்ஸ வித்தாரணவின் பணிகளும் முடிவிற்குக் கொண்டு வரப்படும். ஏன்றே நம்பப்படுகிறது. அவர் தலைமையிலான அரசியற் தீர்வு நடவடிக்கைகள் புறந்தள்ளப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ஏனெனில் ஜனாதிபதி ராஜபக்ச நாட்டின் நல்லிணக்கத்திற்கும், அபிவிருத்திக்குமான சர்வகட்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதில் அரசியற் தீர்வு பற்றி ஆராயப்படவில்லை. ஆனால் அதனை வைத்துக் காலத்தைக் கடத்திச் செல்லலாம் என்றே எதிர் பார்க்கப் படுகிறது.