
யுத்தத்தின் முன்பதாக 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியிருந்த மகிந்த ராஜபக்ச இப்போது அது கிடப்பில் போடப்படுள்ளதாக வெளி நாட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவித்துள்ளார். தமிழ்க் கட்சிகளின் புதிய தீர்வுத்திட்டம் ஒன்றை எதிர்பார்பதாகக் கூறும் மகிந்த ராஜபக்ச காவற்துறை அதிகாரங்களற்ற காவற்துறை அதிகாரங்கள் போன்ற அதிகாரங்களற்ற அதிகாரப் பரவலாக்கல் ஒன்றைப் பரிசீலனை செய்யத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.