இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் தேர்தலை நடாத்தி பிரபாகரனுக்கு ஆதரவானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், அதன் பிரதிபலன்களை அனைவரும் எதிர்நோக்க நேரிடும்.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு போதியளவு பாதுகாப்பு காணப்படுகின்றது. பெரும்பான்மையான தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வடக்கிற்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டியதில்லை.
வடக்கிலிருந்து சிங்கள மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அமைச்சரவைக்கு தேவையான வகையில் அனைத்தையும் செய்ய முடியாது என சம்பிக்க தெரிவித்துள்ளார்.
பௌத்த அடிப்படைவாதப் பயங்க்ரவாதிகளுள் ஒருவரும் மகிந்த குடும்பத்தின் நண்பருமான சம்பிக்க ரணவக்க மகிந்த அரசின் அங்கங்களுள் ஒருவர். சம்பிக்க உரிமைகள் எதுவுமற்ற 13 வது திருத்தச்சட்டத்திற்கு எதிராகக் கூச்சல் போடும் அதே வேளை இந்திய அடிவருடிகள் திருத்தச்சட்டம் தேவை என்கின்றனர். இவை இரண்டும் ஒரு புதிய நாடகம் போன்று நடத்தப்படுகின்றது. பேரினவாதம் தனது உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முனைபவர்களை ஜே.வி.பி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற பெருந்தேசிய ‘இடதுசாரிகள்’, தமது தமிழ் அடியாட்படைகளுடன் இணைந்து கொண்டு அழிக்க முற்படுகின்றனர்.
ஒடுக்குபவனும், ஒடுக்கப்படுபவனும் என பிளவடைந்துள சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக சம உரிமை என்று கூச்சல் போடும் பிழைப்புவாதிகள், இவர்களுக்குத் தீனி போடும் தமிழ் இனவாதிகள் என மக்களின் அவலம் விலைபேசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது,