Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது : கோதாபய

சமூகத்தின் பல்வேறு தரப்பினர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருவதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற தொழில்சார் நிபுணர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தொழில்சார் நிபுணர்களின் பேரiயினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களுக்கு 13ம் திருத்தச் சட்டம் தடையாக அமைந்துள்ளது என தொழில்சார் நிபுணர்களின் பேரவை சுட்டிக்காட்டியிருந்தது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தொழில்சார் நிபுணர்கள் வலியுறுத்தியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-13 வது திருத்தச்சட்டம் குறிப்பாக எந்த அதிகாரத்தையும் சிறுபான்மையினருக்கு இந்திய நலன்களுக்குச் சார்பாக அதிகாரப்பகிர்வை முன்வைக்கிறது. அதுவும் எப்போதும் பறித்தெடுக்கப்படக்கூடியதானது. குறைந்தபட்ச உரிமைகளைக்கூட வழங்கமறுக்கும் இனப்படுகொலை அரசு மக்களைப் போராடத்தூண்டுகிறது.

Exit mobile version