Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

13ம்திருத்தச் சட்ட மூலத்தில் திருத்தங்கள் : ரம்புக்வெல்ல

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் 13ம்திருத்தச் சட்ட மூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

திருத்தங்களை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் காலவரையறைகளை குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும், பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட உள்ளதாகவும், உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கவனிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கையை தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை முழுமையாக வழங்குவது குறித்து நிதானமாககவனிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாணாசபைகளுக்கு குறிப்பிட்ட சில காணி மற்றும் காவல்துறைஅதிகாரங்களை வழங்குவதில் சிக்கல் கிடையாது எனவும், 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்குஅமைவாக வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி காவல்துறை அதிகாரங்களை குறைப்பது மட்டும் 13ம் திருத்தச் சட்டமூலத்தை மாற்றியமைப்பதன் நோக்கமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version