தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டமையால் தமக்கு விமோசனம் கிடைத்துள்ளது என்று தமிழ் மக்கள் அனைவரும் நம்பிக்கை கொள்ளக்கூடியதாக இலங்கை அரசாங்கம் அதன் தமிழ் மக்களின் தேவைகளையும் நலன்களையும் பெருந்தன்மையுடன் நிறைவேற்றி அரசியல் யாப்புக்கான 13ஆவது திருத்தத்தை விரைவாக, முழுமையாக அமுல்செய்ய வேண்டுமெனவும் அதிகாரங்களை பரவலாக்க வேண்டுமெனவும் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்பு, பெரிதும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் தொடர்ச்சியான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவிலுமே தங்கியுள்ளது என்று தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.