இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையில் 13 வது திருத்தத்தை அமுல்படுத்தி தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்குவது தொடர்பில் இந்தியாவில் பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன.
இவ்வாறானதோர் நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென்று உறுதியளித்துள்ளார்.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் அரசாங்கம் 13 வது திருத்தத்தை ரத்து செய்ய முனைந்தால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் அத்துமீறி நுழையும் சமிக்ஞை உள்ளது.
நிறைவேற்று அதிகாரம் அதிகாரப் பரவலாக்கல் மூலம் நிறைவேற்று அதிகாரத்தின் பலத்தை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. ௭னவே இன்றைய தேவை அதிகாரப் பரவலாக்கல் ஊடாக நிறைவேற்று அதிகார பலத்தினை மேலும் குறைப்பதே ஆகும்.
அதைவிடுத்து 1972 ம் ஆண்டு அரசியலமைப்பை உருவாக்கி அதிகார பரவலாக்கலை இல்லாதொழித்து சிங்கள பௌத்த இனவாதத்தை தலைதூக்கச் செய்வதா ௭ன்பதை சிந்திக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரத்திற்கு ௭திராக முதல் முதல் கறுப்புக்கொடி பறக்கவிட்டு சிறை சென்றவன் நான். பின்னர் 1986ல் அதிகாரபரவலாக்கல் தொடர்பாக ௭ம்மோடு ஜே.ஆர். பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு நாம் ஆதரவு வழங்கினோம்.
ஏனென்றால் இதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்தின் பலத்தை கட்டுப்படுத்த முடியும் ௭ன்பதனாலாகும். என்றார்.