உணவில் விஷம் கலந்து சிறைக்குள்ளேயே தன்னைக் கொல்ல சதி நடப்பதாக சிறைத்துறை கூடுதல் இயக்குநர் ஷியாம் சுந்தருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் நளினி. தன்னை வேலூர் பெண்கள் சிறையில் இருந்து மாற்றி சென்னைக்கு அருகே இருக்கும் புழல் சிறைக்கும் மாற்றக் கோரியிருந்தார். இதில் உணவில் விஷம் கலந்து கொல்ல முயர்ச்சி என்ற புகாரை சிறைத்துறை கூடுதல் இயக்குநர் ஷியாம் சுந்தர் உத்தரவின் பேரில், கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பி.கோவிந்தராஜ் தலைமையில், 3 பேர் கொண்ட சிறை அதிகாரிகள் சிறப்புக் குழு மே 4-ம் தேதி சிறையில் விசாரணை நடத்தியது. இதில், உணவில் மருந்து கலப்பதாக நளினி கூறிய புகாரில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இதுதொடர்பான அறிக்கை கூடுதல் இயக்குநருக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வேலூர் பெண்கள் சிறையில் முதல் வகுப்பு சிறை பெற்ற ஒரே பெண் நளினிதான். 3 வேளைக்கான உணவையும் அவரே சமைத்துச் சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர வாரத்தில் இரு முறை நெய், ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், உணவில் மருந்து கலப்பதாகக் கூறப்படும் புகார் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறைத்துறையினர் . இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானராஜசேகரன் நேற்று சட்டமன்றத்தில் பேசும் போது ��பாசத் தலைவன் ராஜீவ்காந்தியை கொடிய முறையில் கொன்ற கொலைகாரி நளினியின் உணவில் விஷம் வைத்துக் கொல்ல முயன்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஏன் சிறைத்துறை இம்மாதிரியான செய்திகள் கசியும் வகையில் இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார். அதாவது விஷம் வைத்து அவரைக் கொன்று விடுங்கள். ஆனால் செய்தி கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது போல பேசினார் ஞானராஜசேகரன்.