Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

120 ஆடைத் தொழிலாளர்கள் பல்தேசியக் கொள்ளயர்களால் மாண்டு போயினர் : காணொளி இணைப்பு

பங்களாதேஷ் இல் ஆடைத் தொழிற்சாலை தீப்பிடித்ததில் 120 தொழிலாளர்கள் உடல் கருகிச் செத்துப்போனார்கள். இதற்கு முன்னரும் எந்த வசதிகளுமற்ற இவ்வாறான தொழிற்சாலைகள் பங்களாதேஷில் திப்பற்றி தொழிலார்கள் இறந்துபோயுள்ளனர். மேலை நாடுகளின் பெரு நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு அடிமைகளை வேலைக்கு அமர்த்தி தயாரிக்கும் டிசைனர் ஆடைவகைகளை இந்தத் தொழிலாளர்களே தயாரிக்கிறார்கள்.
உயிரைப் பாதுக்கொள்வதற்காகப் பலர் மாடிகளிலிருந்து குதித்துப் படுகாயமடைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே மடிந்துபோயினர்.
அங்கு தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலி ஒரு டொலருக்கும் குறைவானதாகவே வழங்கப்படுகிறது.
4500 ஆடை உற்பத்தி ஆலைகள் மிகவும் மூன்றாம் தரமான நிலையிலேயே இயங்குகின்றன. Tesco, Wal-Mart, JC Penney, H&M, Marks & Spencer, Kohl’s and Carrefour போன்ற நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இவர்களின் உழைப்பைச் சுரண்டி மிகப்பெரும் இலாபத்தை ஈட்டுகின்றனர்.

வங்க தேசம்: கொத்தடிமை தேசம்! : அன்பு



 

Exit mobile version