சர்வதேச நாடுகள் எதனைக் கூறினாலும் வடக்கில் இன்று 10க்கும் குறைவான இராணுவ முகாம்களே உள்ளன. வடக்கில் நிலைக் கொண்டிருந்த இருந்த 70 ஆயிரம் இராணுவத்தினரை அரசாங்கம் 12 ஆயிரமாக குறைத்துள்ளது மகிந்த இன்று குறிப்பிட்டார். தெற்காசியாவில் அதி வேகமாக வளர்ச்சியடையும் இராணுவத்தின் குடியிருப்புப் பிரதேசமாக மாறிவரும் இலங்கை இராணுவத்தின் தளமாக வட மாகாணம் மாறிவருகிறது. ஏகதிபத்திய நாடுகளின் அடியாட் படையாக மாற்றமடையும் இலங்கை இராணுவம் தெற்காசிய மக்களின் பாதுக்காபிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட மக்களின் பிணங்களின் மீது கட்டியெழுப்பப்படும் இராணுவ ராஜ்யம் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.