Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிலநடுக்கத்தால் பத்தடி இடம்பெயர்ந்த சிலி நகரம்!

கடந்த மாதத்தில் சிலி நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கான்செப்சியன் என்ற நகரமே மேற்கு நோக்கி பத்து அடி நகர்ந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்ல, தென் அமெரிக்காவின் மற்ற பகுதிகளும் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளன. நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு மையங்களிலிருந்துகிடைத்துள்ள விபரங்கள் இதை உறுதி செய்கின்றன. அர்ஜெண்டினாவும் இந்த இடம் பெயர்தலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. அதன் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் ஒரு அங்குலம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. மேற்கு மற்றும் தென் மேற்கு ஆகிய திசைகளுக்கிடையிலான பாதையில் சுமார் 11 அங்குலம் அளவிற்கு இந்த நகரம் நகர்ந்துள்ளது. நில
நடுக்கம் ஏற்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு தென் அமெரிக்காவைப் படம் பிடித்த செயற்கைக்கோள்களில் இருந்து விபரங்களைப் பெற்று, தற்போதைய நிலையுடன் விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்கள். இது
போன்ற ஏற்பாடுகள் அதிகரிப்பதன் மூலம் மிகவும் தெளிவான நிலைமையைப் படம் பிடிக்க முடியும் என்று அந்த விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இத்தகைய ஆய்வு, நில அறிவியல் துறையில் புதிய பரிமாணத்தை அடைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது. இத்தகைய கண்டுபிடிப்புகள் எப்போதும் இல்லாத அளவிற்கு உடனுக்குடனும், முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். சிலி நிலநடுக்கத்தால் ஏற்
பட்டுள்ள இடம் பெயர்தல் குறித்து ஓஹியோ பல்கலைக்கழகம், ஹவாய் பல்கலைக்கழகம், மெம்பிஸ் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா தொழில்நுட்ப மையம் ஆகியவை ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
தங்கள் ஆய்வுகளைக் கொண்டு இடம் பெயர்ந்த பிறகுள்ள நிலையைக் காட்டும் வரைபடத்தையே அந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்.

Exit mobile version