Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம்!

108 ஆண்டுகளுக்கு பிறகு மாட்டு பொங்கலன்று கங்கண சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ம் தேதி அதிகாலை நிகழ்கிறது.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் தமிழ் நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது:-

நிலவு வெகு தொலைவில் இருக்கும்போது, சூரியனைவிட சந்திரன் சிறியதாக தெரியும். அப்போது, கிரகணம் நேர்ந்தால் சூரியனை சந்திரனால் முழுமை யாக மறைக்க முடியாது. இதனை கங்கண சூரிய கிரகணம் என்கிறோம். அதுபோன்ற கங்கண சூரிய கிரகணம் 2010 ஜனவரி 15 ம் தேதி மாட்டு பொங்க லன்று நிகழ உள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பு 1901-ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிகழ்ந்தது. 108 ஆண்டுக ளுக்கு பிறகு தற்போதுதான் கங்கண சூரிய கிரகணம் நிகழ்கிறது.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இது தெரியும். பகல் 10.44 மணிக்கு மத்திய ஆப்ரிக்காவில் தொடங்கி மதியம் 2.29 மணிக்கு சீனாவில் முடிவடைகிறது. முழு கங்கண சூரிய கிரகணம், உலகெங்கும் பகல் 12.36 மணிக்கு நிகழும். தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், மதுரை, இராஜபாளையம், தர்மபுரி, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, பட்டுக் கோட்டை, வேதாரண்யம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் முழுமையாக தெரியும். சென்னையில் 82.33 சதவீதம் சூரியனை சந்திரன் மறைத்து செல்லும்.

பகல் 11.25 மணிக்கு தொடங்கி 3.15 மணிக்கு முடியும். அதிகபட்ச சூரிய கிரகணம் பகல் 1.30 மணிக்கு தெரியும். இந்த கிரகணம் நிகழும்போது, வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் கண்டுகளிக்க 8 தொலைநோக்கி கருவி கள் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. மேலும் 10 ஆயிரம் சோலார் கண்ணாடியும் வழங்கப்பட உள்ளன.

சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் தெரி யும். இந்தியா முழுவதிலும் இருந்து பள்ளி மாணவர்கள் 500 பேர், ஆசிரியர்கள் 250 பேரை அழைத்துக் கொண்டு முழுமையாக கன்னியாகுமரியில் தெரிய உள்ள முழு கங்கண சூரிய கிரகணத்தை பார்க்க செல் கின்றனர். இவர்களில் தமிழகத்தில் 100 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் அடங்குவர்.

சூரிய கிரகணம் ஏற்படும்போது, சூரியனின் தட்பவெப்ப நிலை மற்றும் அதன் முழு தன்மைகளை அறிந்து கொள்ள முடியும். இனி, தமிழகத்தில் கங்கண சூரிய கிரகணம் 2019 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி நிகழும். சந்திர கிரகணம் வரும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ம் தேதி அதிகாலை 12.21 மணிக்கு தொடங்கி 1.24 மணி வரை நிகழ உள்ளது. நிலவின் தென் பகுதியில் பூமியின் நிழல்பட்டு செல்லும். இதை வெறும் கண் ணால் பார்க்கலாம். நிலவு 80 சதவீதம் ஒளி குறைந்து காணப்படும். சந்திர கிரகணம் ஏற்படும்போது, சந்திரனின் தட்பவெப்ப நிலையும், சந்திரனில் உள்ள பள்ளத்தாக்குகளை அறிந்து கொள்ள முடியும். வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது

Exit mobile version