Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

100 கோடி பொதுச் சொத்தை மோசடிசெய்த கல்மாடி வெளியே

2010ஆம் ஆண்டு புதுடெல்லியில் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைதொடர்ந்து, விளையாட்டு போட்டி அமைப்பு குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி, அதன் தலைமை இயக்குனர் வி.கே. வர்மா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சுமார் 100 கோடி அளவில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., கல்மாடிக்கு இன்று ஜாமின் கிடைத்தது.

Exit mobile version