Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

100 ஆண்டுகளாக இருள் வாழ்க்கை:இருளர் இன மக்கள் சோகம்!

 
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஓகேனக்கல்லிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஊட்டமலை தொட்டிபள்ளம். மலையின் நடுவே உள்ள தொட்டிபள் ளத்தில் 30 க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் உள்ளது. வனத்தையே உலகமாக நினைக்கும் இவர்கள் கல்லுக்கிடியில் கூடாரம் அமைத்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

சுண்டக்காய், தேன் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்வார்கள். மலையில் உள்ள காய்ந்த விறகுகளை சேகரித்து ஒகேனக்கல்லுக்கு தலையில் சுமந்து சென்று ஒரு செமை பன்னிரெண்டு ரூபாய்க்கு விற்று வருகின்றனர். இம்மக்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என எதுவுமே இல்லை. மாவட்ட நிர்வாகத் திற்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இருளர் வசிக்கும் பகுதியில் யாரும் படித்ததில்லை. இங்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. கல்வி என்றால் என்னவென்றே தெரியாது. கல்விஅறிவு இல்லாததால் 13, 14 வயதி லேயே திருமணமும் நடந்து வடுகிறது. தன்னு டைய 15 வயதில் குழந்தைக்கு தாயாகி விருகின்ற பெண்களின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.

பெரியசெல்வம் கூறுகையில், எங்க தாத்தா எங்க அப்பா எல்லாமே இந்த மலையில தான் இருந்தாங்க. நிலம் இல்ல, வீடு இல்ல எல்லாமே வனம்தான். பகல் நேரத்துல இருள கிழங்கு தேடவும் தேன் எடுக்க போயிடுவோம். இரவு நேரத் துல கிழங்கையே சாப்பிட் டுட்டு படுத்துக்குவோம். இந்த வனத்துல் குடிக்க தண்ணி கிடைக்கிறதுல்ல இதனால இரவு நேரங்கள்ல காட்டு எரும, மான், யானை, கரடி வந்திடுது. தினம் தினம் குழந்த குட்டியோட பயந்து வாழவேண்டியிருக்குது என்றார்.

காளியப்பன் கூறுகை யில், பெரியவங்களுக்கு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சினா காட்டுலகிற மூலிகை மருந்த சாப்பிடுவோம். எங்க பொம்பளைங்களுக்கு பிரச வம் எல்லாமே இங்க தான். முடியாம போனா மருத்து வமனைக்கு போவோம். சில நேரத்துல போற வழியிலே இறந்துடுவாங்க. எங்க வாழ்வு, சாவு எல்லாம் இந்த வனத்துலதான் . எங்க காட்டு மாரியாத்தா தான் காப்பாத் தனும் என்றார் பரிதாபமாக. தொட்டிபள்ளம் இருளர் இன மக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டசெயலாளர் கே.என். மல்லையன், மாவட்டகுழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று அம்மக்களின் குறைகளை யும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர். தொட்டி பள்ளம் இருளர் இன மக்களுக்கு ஓகேனக்கல் அருகே தொகுப்பு வீடு கட்டி, தர வேண்டும். குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் அமைக்கவேண்டும். குடும்ப அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை பழங்குடி யினர் இனச்சான்று உள் ளிட்ட அரசு நல திட்டங் கள் வழங்க வேண்டும். சிறு தொழில் செய்ய வங்கி கடன் வழங்கவேண்டும். 2006 வனஉரிமைச்சட்டத்தின்படி நிலப்பட்டா, மனைபட்டா உள்ளிட்ட சலுகைகள் வழங்கவேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் கே.என். மல்லையன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத் தியுள்ளார்.

-லெனின்

Exit mobile version